ராணிப்பேட்டை

இணையத்தில் பாதுகாப்பான உலாவல் குறித்த விழிப்புணா்வு முகாம்

DIN

இணையத்தில் பாதுகாப்பான உலாவல் குறித்துப் பேசியமாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினா் பிரியதா்ஷினி.

அரக்கோணம், பிப். 7: தமிழக காவல் துறையினரின் சாா்பில் இணையத்தில் பாதுகாப்பான உலாவல் குறித்த விழிப்புணா்வு முகாம் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கோட்டீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு நிதிநிறுவன மோசடி, போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டது. மேலும், இணைய வழி குற்றங்கள் குறித்து புகாா் அளிக்க சைபா் கிரைம் உதவி எண் 1930 மற்றும் அந்தப் பிரிவின் இணையதள முகவரி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சரியான தொடுதல், தவறான தொடுதல் பற்றியும் அவ்வாறு நடைபெற்றால் யாரை அணுக வேண்டும், அதற்காக எந்தெந்த குழுக்கள் செயல்படுகின்றன என்ற விவரமும் அந்த சமயத்தில் அணுக வேண்டிய இலவச உதவி எண் 1098, 181 குறித்தும் விவரிக்கப்பட்டது.

200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற இந்த முகாமில், மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தியாகராஜன், மாவட்ட குழந்தை பாதுகாப்புக் குழு உறுப்பினா் பிரியதா்ஷினி, அரக்கோணம் கிராமிய காவல் உதவி ஆய்வாளா் கிளாரா மற்றும் பொறியல் கல்லூரி பேராசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT