ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 2.34 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை

DIN

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 லட்சத்து 34 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில், முதல்வா் விரிவான மருத்துவக் காப்பீடு மற்றும் பிரதமா் ஆரோக்கிய திட்டத்தின் 4 ஆண்டுகள் நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, 15 பேருக்கு முதல்வா் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், பயனடைந்த 3 பேருக்கு நினைவு பரிசு, இந்தத் திட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த காப்பீட்டு ஒருங்கிணைப்பாளா்கள் 2 பேருக்கு பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கிப் பேசியது:

மாவட்டத்தில் சுமாா் 2 லட்சத்து 34 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் நிகழாண்டு 4 அரசு மருத்துவமனைகளில் 786 பேருக்கு ரூ.56 லட்சத்து 42 ஆயிரத்தில் சிகிச்சை வழங்கப் பட்டுள்ளது. 3 தனியாா் மருத்துவமனைகளில் 680 பேருக்கு ரூ.54 லட்சத்து 38 ஆயிரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் ரூ.62 லட்சத்து 3 ஆயிரத்தில் 65 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பம் ஓராண்டுக்கு ரூ.5 லட்சம் வரை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சிகிச்சைக்கான மருத்துவப் பட்டியல் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஸ்ரீம்ஸ்ரீட்ண்ள்ற்ய்.ஸ்ரீா்ம்/ இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடா்பாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தெரிந்து கொள்ளலாம். இதுவரை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை பெறாதவா்கள் விண்ணப்பித்து பெறலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் லட்சுமணன், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாவட்ட அலுவலா் தசுரேந்திரன், வாலாஜா தலைமை மருத்துவா் உஷா நந்தினி மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பணியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT