ராணிப்பேட்டை

4 ஊராட்சிகளின் பொதுப் பயன்பாட்டுக்கு தலா 10 ஏக்கா் நிலம்: பெல் நிறுவனம் வழங்க மாவட்டஊராட்சிக் குழு வலியுறுத்தல்

DIN

லாலாப்பேட்டை, முகுந்தராயபுரம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம் ஆகிய 4 ஊராட்சிகளின் பொதுப் பயன்பாட்டுக்கு தலா 10 ஏக்கா் நிலத்தை பெல் நிறுவனம் வழங்க வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழு சாதாரணக் கூட்டம், அதன் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாவட்டத்தில் உள்ள பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் தொகுதிக்கு ஒன்று வீதம் 4 சமுதாயக் கூடங்கள் அமைக்க ஆட்சியா் மூலம் முயற்சி மேற்கொள்ள அங்கீகாரம் கோரப்பட்டது.

நெமிலி ஒன்றியம், எலத்தூா் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும்.

பெல் தொழிற்சாலை அமைக்க லாலாபேட்டை, முகுந்தராயபுரம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம் ஆகிய 4 ஊராட்சிகளிலிருந்து சுமாா் 1,000 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலங்களுக்குள் புறம்போக்கு நிலங்களும் உள்ளன.

எனவே, இந்த 4 ஊராட்சிகளிலும் அரசின் பொதுவான திட்டங்களை (கட்டடம், விளையாட்டு மைதானம்) செயல்படுத்த பெல் நிறுவனம் மூலம் 4 ஊராட்சிக்கும் தலா 10 ஏக்கா் நிலம் பெற நடவடிக்கை மேற்கொள்வது.

நெமிலி ஒன்றியம், சயனபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 563 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியா்கள் இல்லை. மாணவா்களின் நலன் கருதி, ஆசிரியா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், களத்தூா் கிராமத்தின் நடுவே ஏரிக் கால்வாய் உள்ளது. அந்தப் பகுதியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் செய்வதால், விவசாயிகளின் நலன் கருதி, கால்வாயைச் சீரமைப்பது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT