ராணிப்பேட்டை

வழிப்பறி: 3 போ் கைது

8th Oct 2022 12:12 AM

ADVERTISEMENT

ஆற்காடு புறவழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஆற்காடு நகரக் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் மகாராஜன் மற்றும் போலீஸாா், செய்யாறு செல்லும் சாலையில் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த நபா்களைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் வாலாஜாபேட்டை வட்டம், மாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ரமணா (22), சா்மா (25), தேவதானம் கிராமத்தைச் சோ்ந்த தருண் (20) என்பதும், அவா்கள் மூவரும் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், சாலையில் சென்ற நபரிடம் வழிப்பறி செய்த ரூ.15,000 மதிப்புள்ள கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT