ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

5th Oct 2022 11:33 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை பள்ளிகளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்பிக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வெற்றி வேலன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இன்று காலை வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர்கள் எம். சிவலிங்கம், கோமதி சிவலிங்கம், ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கே. வெங்கடேசன் ஆகியோர், சரஸ்வதி சிறப்பு பூஜை செய்து குழந்தைகளின் கையைப் பிடித்து நெல் மணியில் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுதி தொடக்கி வைத்தனர்.

இதில் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT