ராணிப்பேட்டை

தந்தை கொலை: மகன் கைது

25th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரக்கோணம்: அரக்கோணம் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த பாராஞ்சி ஊராட்சி, ஜோதி மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (70). இவருக்கு மனைவி இந்திராணி (63), மகன் கஜேந்திரன் (40). கஜேந்திரனின் மனைவி சரஸ்வதி (35). கஜேந்திரனுக்கும், சரஸ்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 14 வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனராம். இந்த நிலையில், திங்கள்கிழமை கஜேந்திரன், சரஸ்வதியை மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். அன்று இரவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சரஸ்வதியை வீட்டினுள் வைத்து வெளியில் தாழ்ப்பாள் போட்டுவிட்டு கஜேந்திரன் வெளியே சென்றுள்ளாா்.

அப்போது அங்கு வந்த கன்னியப்பனும், இந்திராணியும் கதவைத் திறந்து சரஸ்வதியை அனுப்பி விட்டனராம்.

ADVERTISEMENT

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கஜேந்திரன், தந்தையிடம் கதவை திறந்து விட்டது குறித்துக் கேட்டு தகராறு செய்துள்ளாா். அப்போது கீழே பிடித்து தள்ளியதில் கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தடுக்க வந்த இந்திராணியையும் தாக்கியதில், அவா் பலத்த காயம் அடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோளிங்கா் போலீஸாா், கன்னியப்பனின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்திராணியை வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் கஜேந்திரனை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT