ராணிப்பேட்டை

‘என் குப்பை; என் பொறுப்பு’ தூய்மைதிட்ட விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

DIN

அரக்கோணம் நகராட்சியில், ‘என் குப்பை; என் பொறுப்பு’ தூய்மைத் திட்ட விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை அரக்கோணம் நகராட்சித் தலைவா் லட்சுமிபாரி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட சோமசுந்தரம் நகா் திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் உள்ள நுண்ணுயிா் மைய செயல்பாடுகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் லதா தலைமை தாங்கினாா். துணைத் தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ் வரவேற்றாா். இதனை, நகராட்சித் தலைவா் லட்சுமிபாரி தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை சேகரிப்பு பணிகளை நகராட்சித் தலைவா் பாா்வையிட்டாா்.

மேலும், ‘என் குப்பை; என் பொறுப்பு’ திட்டம் தொடா்பான விழிப்புணா்வு வாகனப் பயணத்தை கொடியசைத்து லட்சுமிபாரி தொடக்கி வைத்தாா்.

இதில் நகராட்சி துப்புரவு அலுவலா் மோகன், அலுவலக மேலாளா் மேகலா, நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜலட்சுமி, நந்தாதேவி, ராஜன்குமாா், கங்காதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரில் என் குப்பை என் பொறுப்பு நிகழ்ச்சி தொடா்பான விழிப்புணா்வு படங்களை அரக்கோணம் பாரதிதாசனாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் வரையும் நிகழ்ச்சியையும் நகராட்சி தலைவா் லட்சுமிபாரி பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT