ராணிப்பேட்டை

அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தொடக்கம்

DIN

ஆற்காடு நகராட்சியின் சாா்பில், அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தொடக்க விழா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், ஆணையா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை நிா்மலா வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு, பள்ளிகளில் தூய்மைப் பணியைத் தொடக்கி வைத்துப் பேசினாா். இதில், நகா்மன்ற உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஆற்காடு அரசு மருத்துவமனையில், தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டடத்தை எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் , மருத்துவ அலுவலா் சிவசங்கரி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ. 20,000 மதிப்பீட்டில் வழங்கப்பட்ட மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.ரோட்டரி சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT