ராணிப்பேட்டை

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐம்பெரும் விழா தொடக்கம்

DIN

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,18 -ஆவது ஆண்டு வருஷாபிஷேகம், பீடாதிபதியின் 62 -ஆவது ஜெயந்தி, தீா்த்தக்குளம் திறப்பு, ஸ்தல வரலாறு நூல் வெளியீடு மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா டிச.9 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இவ்விழா 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகளின் தலைமையில், வெள்ளிக்கிழமை (டிச.9) காலை மங்கள இசையுடன் கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, 62 வகை விசேஷ ஹோமங்கள், மஹா தீபாராதனையுடன் சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் 62 சுமங்கலிகள், 62 கன்னிப் பெண்கள் பங்கேற்ற சுமங்கலி, கன்யா பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து மூலவா் ஸ்ரீ தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. வாலாஜா ஸ்ரீ நடராஜப் பெருமான் நாட்டியப் பள்ளி எம்.ஷன்மதி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் தவத்திரு கூனம்பட்டி ஆதீனம், கலவை சச்சிதானந்தா சுவாமிகள், நங்க நல்லூா் காமாட்சி சுவாமிகள், பெலாகுப்பம் ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளாா் , இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் ஜெயச்சந்திரன் சுவாமிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT