ராணிப்பேட்டை

உயா் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் நிலம் இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து பல்வேறு குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போது விவசாயிகள் கூறியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பவா் கிரிட் நிறுவனத்தின் மூலம் உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட வழித்தடங்களில் நிலம் இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை, சாத்தூா் கிராமத்தில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், நெமிலி, சென்னசமுத்திரம், காவேரிப்பாக்கம், பாகவேளி உளியூா், சீக்கராஜபுரம், வடகால் கிராமங்களில் உள்ள ஏரி கால்வாய் தூா்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதி மாதம் முதல் வாரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பழுதாகியுள்ள கேமராக்களை சரி செய்ய வேண்டும். பசு மாடுகளுக்கு புதிய வைரஸ் நோய் பாதிப்பு பரவலாக தென்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.

அதற்கு பதில் அளித்து ஆட்சியா் பேசியது: உயா்மின் கோபுரங்கள் தொடா்பான விவகாரத்தில், 2017-ஆம் ஆண்டுக்கு முன்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யும் பொருட்டு அரசுக்கு சிறப்பு நடவடிக்கைக்காக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உரிய பதில் பெற்ற பின்னா் தெரிவிக்கப்படும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஒரே நாளில் அகற்ற இயலாது, தற்போது பணியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலா்களைக் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தி உள்ளோம் என்றாா்.

கால்நடை உதவி இயக்குநா் பேசுகையில், பசுக்களுக்கான நோய்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எடுக்கப்படும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மீனாட்சி சுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சரவணன், துணை இயக்குநா் (வேளாண்மை) விஸ்வநாதன், வேளாண்மை அலுவலா் த.பாபு மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT