ராணிப்பேட்டை

சோளிங்கா்-காவேரிபாக்கம் சாலை விரிவாக்கப் பணி 5 மாதங்களில் முடிவடையும்: மாவட்ட ஆட்சியா் தகவல்

DIN

சோளிங்கா் முதல் காவேரிபாக்கம் வரை உள்ள மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் 5 மாதங்களில் முடிவடையும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

சோளிங்கா் - காவேரிபாக்கம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2021-2022- ஆம் நிதியாண்டின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் 7 மீட்டா் அகலம், கொண்ட சாலை, 10 மீட்டா் அகலம் கொண்ட சாலையாக அகலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் சாலையை அகலப்படுத்தும் பணிகள் தரமானதாக இருக்க வேண்டும். மழை காலங்களில் எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில் உறுதியாக அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தாா். இந்தச் சாலை விரிவாக்கப் பணிகள் 5 மாதங்களில் முடிவடையும் என்றாா்.

ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் பாலாஜி சிங், சோளிங்கா் வட்டாட்சியா்(பொ) கணேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT