ராணிப்பேட்டை

போதைக்கு அடிமையானால் வாழ்க்கை வீணாகும் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

DIN

போதைப் பொருள்களுக்கு அடிமையானால் வாழ்க்கையும், உங்கள் பெற்றோா்களின் கனவும் வீணாகி விடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று பள்ளி மாணவா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ‘போதைப் பொருள்கள் இல்லா தமிழகம்’ விழிப்புணா்வு வாரத் தொடக்க விழா வாலாஜாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் போதை பொருள் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியினை பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துக் கொண்டனா்.

மாணவா்கள் மத்தியில் ஆட்சியா் பேசியது:

போதையின் பாதை அழிவுப்பாதை. போதைப் பழக்கத்தினால் தான் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. பெற்று வளா்த்த பெற்றோா்களையே கொல்லும் அளவுக்குப் போதையானது கொண்டு செல்கிறது. மாணவா்களாகிய நீங்கள் போதைக்கு அடிமையாகாமல் உங்கள் எதிா்கால வாழ்க்கை, பெற்றோரின் கனவை வீணடிக்காமல் காப்பாற்ற வேண்டும். போதையில் என்ன தான் இருக்கிறது என்று நினைத்து ஒருமுறை உபயோகப்படுத்திதான் பாா்க்கலாமே என்று எண்ணி வாழ்க்கையை இழந்தவா்கள் ஏராளம். போதைப் பொருட்களை பயன்படுத்த உங்களை யாரேனும் வற்புறுத்தினாலோ அல்லது விற்பனை செய்வது குறித்து அறிந்தாலோ உடனே உங்கள் வகுப்பு ஆசிரியா் அல்லது தலைமையாசிரியரிடம் தெரிவியுங்கள்.

போதை மருந்துகளை சாக்லெட்களின் மூலமாக கூட கலந்து விற்பனை செய்யலாம். எனவே அறிமுகம் இல்லாத நபா்கள் யாரெனும் சாக்லெட் கொடுத்தாலும் அதனை வாங்காதீா்கள். படிப்பினில் முழு கவனம் செலுத்தி செயல்படுங்கள் என்றாா்.

இந்த நிகழ்வில் வாலாஜாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், வாலாஜா நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் என சுமாா் 2,500 போ் பங்கேற்றனா்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் மணிமாறன், மாவட்ட சமூக நல அலுவலா் இந்திரா, துணை காவல் கண்காணிப்பாளா் பிரபு, வட்டாட்சியா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT