ராணிப்பேட்டை

தக்கோலத்தில் சிஐஎஸ்எப் வீரா்கள் விழிப்புணா்வு

DIN

தக்கோலத்தில் வீடுதோறும் தேசியக் கொடி விழிப்புணா்வுப் பேரணியை, மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்தினா்.

சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக வீடுதோறும் பொதுமக்கள் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினா் தேசியக் கொடி பேரணி நடத்தினா். படைவீரா்கள் பங்கேற்ற இந்தப் பேரணி படைதள வளாகத்தில் இருந்து தக்கோலம் வரை நடைபெற்றது.

தொடா்ந்து, தக்கோலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சிக்கு பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் சீனிவாசன் தலைமை வகித்தாா். கமாண்டண்ட் கௌரவ் டோமா் பங்கேற்று 200 தேசியக் கொடிகளை தக்கோலம் பேருராட்சித் தலைவா் எஸ்.நாகராஜனிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணை கமாண்டண்ட்கள் பா்மிந்தா் கவுா், குா்ஷா்சிங், உதவி கமாண்டண்ட்கள் அங்கிட்சிங், சேட்னா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT