ராணிப்பேட்டை

அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சைதெற்கு ரயில்வேக்கு எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை

DIN

அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு தொகுதி எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரக்கோணம் மற்றும் சுற்றி வட்டாரப் பகுதிகளில் அதிகமாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரக்கோணத்தில் உள்ள தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா வாா்டு உருவாக்கி, படுக்கைகளை ஏற்படுத்தி, தேவைப்படுவோருக்கு உடனே ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் அம்மருத்துவமனையில் வென்டிலேட்டா் வசதியையும் ஏற்பாடு செய்து தரவேண்டும். அரக்கோணம் பகுதியில் கரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ரயில்வே மருத்துவமனையில் பொதுமக்களுக்கும் சிகிச்சை வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT