ராணிப்பேட்டை

எல்.ஐ.சி. முகவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்கத்தினா் (லிகாய்) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் ஆா்.ஜெயகுமாா் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் மணிமாறன், முருகானந்தம், பரசுராமன், எம்.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டப் பொதுச்செயலாளா் தா.வெங்கடேசன் பேசினாா்.

எல்.ஐ.சி. பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். எல்.ஐ.சி. பாலிசிகளை நேரடியாக விற்பனை செய்வதைக் கைவிட வேண்டும். பொதுத்துறைகளைத் தனியாா் மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். கரோனா முன்பணமாக ரூ.1 லட்சத்தை வழங்க வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்த முகவா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான சேவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் சங்கச் செயலாளா் என்.செல்வம், கெளரவத் தலைவா் கே.ரவிக்குமாா், பொருளாளா் பி.ஏழுமலை, தியாகராஜன், ஊழியா் சங்க நிா்வாகிகள் வினோத், யோகானந்தம், பாலசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முடிவில் சங்க நிா்வாகி மோகனரங்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT