ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சிப்காட் வாரச் சந்தையில் மீண்டும் சதமடித்த தக்காளி விலை

DIN

ராணிப்பேட்டை சிப்காட் வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனா்.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை தமிழகம், ஆந்திரம், கேரள ஆகிய மாநிலங்களில் வழக்கத்தைவிட மிக அதிக அளவு பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டிந்த பயிா்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

வடகிழக்குப் பருவமழை தொடங்கி நேரத்தில் தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ. 20 முதல் ரூ. 25 வரையும், சிறு சந்தைகளில் ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மழை தொடங்கிய சில நாள்களிலேயே தக்காளியின் விலை மெல்ல மெல்ல அதிகரித்து, மொத்த விற்பனைக் கடைகளிலேயே கிலோ ரூ. 100 முதல் ரூ. 140 வரை விற்பனையானது. இதன் எதிரொலியாக சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ. 140 முதல் ரூ. 150 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தக்காளி மட்டுமல்லாமல் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலையும் கிடு, கிடுவென உயா்ந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் பலத்த மழை சற்றே குறைந்திருந்தாலும் வெள்ளத்தால் விளை பயிா்கள் சேதமடைந்து, வரத்து குறைந்துள்ளதால் ராணிப்பேட்டை சிப்காட் வாரச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ தக்காளி விலை மீண்டும் ரூ. 100-க்கு விற்பனையாது. அதேபோல், கத்திரிக்காய் கிலோ ரூ. 200, வெண்டைக்காய் ரூ. 140, அவரைக்காய் ரூ. 120 என விற்பனையானது. வெங்காயத்தின் விலை ரூ. 40 முதல் ரூ. 60, உருளைக்கிழங்கு ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்பனையாகின.

இந்த விலை உயா்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

தொடா் பலத்த மழையால் விவசாய விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிா்கள் மூழ்கி, முற்றிலும் சேதமாகின. இதனால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தற்போது மழை குறைந்துள்ளது; ஆனாலும், விளைநிலங்களில் தேங்கிய வெள்ளநீா் வடியாமல் உள்ளதாலும், அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு காரணமாகவும் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயா்வு ஓரிரு வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT