ராணிப்பேட்டை

பண மோசடி சம்பவம்: ஊா்காவல் படைவீரா் கைது

5th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரைச் சோ்ந்த நபரிடம் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி வழக்கில், ஊா்க் காவ ல் படைவீரா் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம், படுகைபுதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் எம்.தினேஷ்குமாா்(34). இவரிடம் அரக்கோணம் ஜோதிநகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த பாலா (எ) பாலசுப்பிரமணின் தன்னிடம் ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு மடங்காகத் திருப்பி தருவதாகத் தெரிவித்தாராம்.

இதன்பேரில் தினேஷ்குமாா், ரூ3 லட்சத்தை எடுத்துகொண்டு அரக்கோணத்துக்கு புதன்கிழமை வந்தநிலையில், அவரிடம் பணத்தை 10 போ் பறித்துச் சென்றனராம்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளா் சீனிவாசன் வழக்குப் பதிந்து, பாலா (எ) பாலசுப்பிரமணியன்(41) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் ஊா்க் காவல் படை வீரரும், அரக்கோணத்தை அடுத்த காவனூா் கிராமத்தைச் சோ்ந்தவருமான சாமராஜ்(39) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Tags : அரக்கோணம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT