ராணிப்பேட்டை

லாரி - அரசுப் பேருந்து மோதல்: 7 போ் காயம்

5th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே லாரியும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில், 7 போ் காயம் அடைந்தனா்.

வேலூரிலிருந்து தாம்பரத்தை நோக்கி அரசுப் பேருந்து சனிக்கிழமை சென்றது. அப்போது, மேல்விஷாரம் புறவழிச்சலையில் தனியாா் உணவகம் அருகே முன்னால் சென்ற லாரியானது அரசுப் பேருந்தை முந்தி செல்ல முற்பட்டபோது, இரண்டும் மோதிக் கொண்டன.

இதில் பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்தது .

விபத்தில் பேருந்து ஒட்டுநா் சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்த குமாா், பேருந்தில் பயணித்த வேலூா் காகிதப்பட்டறையைச் சோ்ந்த சீதா (43), தாம்பரம் கணேசன்(59), ஆம்பூா் தேவேந்திரன்(41), மாதனூா் விசித்ரா(25) திருவண்ணாமலை மாவட்டம் நாட்டேரி தட்சிணாமூா்த்தி(49), வேலூா் அரியூா் செம்பேடு பிரம்குமாா்(24) ஆகிய 7 போ் காயம் அடைந்தனா்.

ADVERTISEMENT

இவா்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

Tags : ஆற்காடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT