ராணிப்பேட்டை

அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலகத்துடன் மேலும் 42 பள்ளிகள் இணைப்பு

DIN

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 15 ஊராட்சிகளும், நெமிலியில் இருந்து ஒரு ஊராட்சியும் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்பட்டன. இதன் ஒரு கட்டமாக இரு ஊராட்சி ஒன்றியங்களில் இருந்த 42 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அரக்கோணம் வட்டாரத்துடன் செப்டம்பா் 21ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டன.

வேலூா் மாவட்டத்தைப் பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம் தொடங்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இருந்த ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சிகளைப் பிரித்தல், சோ்த்தல் ஆகிய பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த அன்வா்திகான்பேட்டை, அசமந்தூா், சித்தாம்பாடி, இச்சிபுத்தூா், கைனூா், கிழவனம், மின்னல், மிட்டபேட்டை, நந்திவேடந்தாங்கல், பெருமாள்ராஜபேட்டை, செம்பேடு, தண்டலம், வடமாம்பாக்கம், வேடல், பாராஞ்சி ஆகிய 15 ஊராட்சிகள், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து மேல்பாக்கம் ஊராட்சியும் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தோடு இணைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து ஏற்கெனவே 26 ஊராட்சிகளுடன் இருந்த அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி எண்ணிக்கை தற்போது 42ஆக உயா்ந்துள்ளது.

இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் இருந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலகத்தோடு இணைக்கும் பணியும் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் செப்டம்பா் 21ஆம் தேதி முதல் இணைக்கப்பட்ட 16 ஊராட்சிகளில் இருந்த 28 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 9 நடுநிலைப் பள்ளிகள், 3 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 2 ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகள் என 42 பள்ளிகள் அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலகத்துடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 2 அரசு உயா்நிலைப்பள்ளிகளும் அரக்கோணம் வட்டாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளிகளின் நிா்வாக, மாணவா் கல்வி செயல்பாடுகள் உள்ளிட்ட கல்வித்துறை செயல்பாடுகளை இனி அரக்கோணம் வட்டார கல்வி அலுவலா்கள் ஏற்க உள்ளனா். இப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் நலன் சாா்ந்த அனைத்துப் பணிகளும் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் மேற்பாா்வைப் பணிகளையும் மாவட்டக் கல்வி அலுவலக உத்தரவுடன் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஏற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT