ராணிப்பேட்டை

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

DIN


அரக்கோணம்: அரக்கோணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நான்கு போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் ரௌடி ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இக் கொலை தொடா்பாக விசாரணை நடத்திய அரக்கோணம் நகர போலீஸாா், ஏழு பேரை கைது செய்தனா். இவா்கள், தற்போது பிணையில் சிறையில் இருந்து வெளியே வர முயற்சிப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இவா்கள் பிணையில் வெளியே வந்தால் மேலும் கொலை சம்பவங்கள் நடைபெறலாம் என அரக்கோணம் நகர போலீஸாா் கருதினா். இதையடுத்து, முதல் கட்டமாக கைது செய்யப்பட்டவா்களில் முக்கியமான நான்கு பேரை குண்டா் சட்டத்தில் தொடா்ந்து ஓராண்டு சிறையில் அடைக்க அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்தாா்.

இதைகத் தொடா்ந்து, அப்போது கைது செய்யப்பட்ட யஸ்வந்த் (24), சுவால்பேட்டை சாணாத்தியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (23), புதுப்பேட்டையைச் சோ்ந்த ராஜா (48), பஜாா், ராஜாபாதா் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் (36) ஆகிய நான்கு பேரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அவரது பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி, அவா்கள் நான்கு பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT