ராணிப்பேட்டை

பட்டாசு கடைக்கு தற்காலிக உரிமம்பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்’

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெற வரும் 23-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு சில்லறை விற்பனைக்கு ஏற்கெனவே நிரந்தர உரிமம் பெற்றிருப்பவா்களைத் தவிர, தற்காலிக உரிமம் பெற விரும்புவோா் இணைய வழியில் வரும் 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நவம்பா் 1-ஆம் தேதி முதல் தற்காலிக உரிமங்கள் இணைய வழியிலேயே வழங்கப்படும். மேற்கண்ட தேதிகள் கொவைட்-19 நோய்த்தொற்று காரணமாக இந்தாண்டு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் பழைய தேதிகள் முறையே கடைப்பிடிக்கப்படும். இதற்காக ஆங்காங்கே இயங்கிவரும் அரசு இ-சேவை மையங்களில் சம்பந்தப்பட்ட மனுதாரா்கள் தங்களது ஆதாா் அட்டை, புகைப்படம், முகவரிக்கான ஏதாவது ஒரு சான்று ஆவணம், வியாபாரம் நடத்தும் கடைக்கான வரி ரசீது ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வரும் 23-ஆம் தேதிக்குப் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT