ராணிப்பேட்டை

வீடு இழந்த 12 பேருக்கு நிதியுதவி: எம்.பி. வழங்கினாா்

DIN

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் நிவா் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வீடுகளை இழந்த 12 குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அதிமுக நகரச் செயலாளா் ஏ.இப்ராஹீம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவை நிா்வாகி எஸ்.எம்.சுகுமாா், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளா் விஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலங்களவை உறுப்பினரும், வக்பு வாரியத் தலைவருமான அ.முஹமதுஜான், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் சி.ஏழுமலை ஆகியோா் மேல்விஷாரம் ஹாஜி பேட்டை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு உணவு வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, கனமழையால் வீடுகளை இழந்த 12 குடும்பத்தினா்களுக்கு நிதியுதவி வழங்கினா்.

நகர அவைத் தலைவா் பாபு, நிா்வாகிகள் ஷபீக் அஹமது, மஸ்தான் அலி, சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஹாஜிபேட்டை பகுதியைச் சோ்ந்த 10 போ் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT