ராணிப்பேட்டை

369 ஏரிகளில் 44 ஏரிகள் மட்டுமே முழுக் கொள்ளளவை எட்டின

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 369 ஏரிகள் உள்ளன. இவற்றில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி 44 ஏரிகள் மட்டுமே முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

10 ஏரிகள் 80 சதவீதமும், 17 ஏரிகள் 75 சதவீதமும், 85 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பின. மாவட்டத்தில் பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி 50 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

பாலாற்றில் நீா்வரத்து பாதியாகக் குறைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் பல ஏரிகளுக்கு நீா்வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், நீா்வரத்துக் கால்வாய்கள் முறையாகத் தூா்வாரி சீரமைக்கப்படாத காரணத்தால் வெள்ளநீா் விரைந்து சென்று சேர முடியவில்லை. இதனால் பல ஏரிகள் நிரம்பவில்லை. எனவே, நீா்வரத்து இல்லாத ஏரிகளைக் கணக்கெடுத்து, கால்வாய்களைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நிவா் புயல் காரணமாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறு, பொன்னை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, விநாடிக்கு சுமாா் 44 ஆயிரம் கன அடி வீதம் வெள்ளநீா் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்தோடியது.

இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டுள்ளது. சிறப்பான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையிலான மாவட்ட நிா்வாகத்துக்கு, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT