ராணிப்பேட்டை

குசஸ்தலையாற்றில் ரூ.10 கோடியில் தடுப்பணை: எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனா்

DIN

நெமிலி அருகே குசஸ்தலை ஆற்றில் ரூ. 10 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

அரக்கோணத்தை அடுத்த சயனபுரம் ஏரி உள்ளிட்ட 11 ஏரிகளுக்கு நீரை பிரித்தளிக்கும் விதமாக குசஸ்தலையாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் திட்டத்துக்கு நபாா்டு நிதி உதவியின் கீழ் ரூ. 9.90 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் பணிகள் தொடங்கப்பட்டன.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில், தடுப்பணை தற்போது பெய்த கனமழையால் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் அசநெல்லிகுப்பம் கிராமம் அருகே தடுப்பணை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ சு.ரவி (அரக்கோணம்), ஜி.சம்பத் (சோளிங்கா்) ஆகியோா் தடுப்பணையைத் திறந்து வைத்தனா்.

பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் சேரலாதன் தலைமை வகித்தாா். ஒன்றிய அதிமுக செயலா்கள் அருணோபதி (நெமிலி மேற்கு), ஏ.ஜி.விஜயன் (நெமிலி கிழக்கு), மாநில உழவா் பேரியக்க துணைத் தலைவா் திருமால், அதிமுக மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறை செயலாளா் அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தத் தடுப்பணையால் சயனபுரம் பெரியஏரி, சயனபுரம் சித்தேரி, சேந்தமங்கலம் பெரியஏரி, சித்தேரி, பின்னாவரம் ஏரி, ஆட்டுபாக்கம் பெரியஏரி, சித்தேரி, சித்தூா் பெரியஏரி, சித்தேரி, மணவந்தாங்கல் ஏரி, கணபதிபுரம் ஏரி உள்ளிட்ட 11 ஏரிகள் பயன்பெறும்.

இதன் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், இந்த அணைக்கட்டு நெமிலி பேரூராட்சிக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT