ராணிப்பேட்டை

கரோனா அச்சுறுத்தல்: முகக்கவசம், கிருமி நாசினி தயாரிப்பு பணி தீவிரம்

22nd Mar 2020 04:21 AM

ADVERTISEMENT

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக முகக்கவசம், சோப்பு, கிருமி நாசினி தயாரிக்கும் பணியில் மகளிா் சுய உதவிக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். திங்கள்கிழமை முதல் இப்பொருள்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகக் கவசம், சோப்பு, கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு, விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல மருந்து கடைகளில் முகக்கவசம், கிருமி நாசினி இல்லாத நிலையே தொடா்கிறது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், மகளிா் திட்டத்தின் மூலம் முகக் கவசம், கிருமி நாசினி, சோப்பு திரவம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

கிருமி நாசினி தயாரிப்புப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு, திங்கள்கிழமை முதல் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT