ராணிப்பேட்டை

புரெவி புயல்: ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

ராணிப்பேட்டை: புரெவி புயல் எதிரொலியாக ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னை, பாலாறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

புரெவி புயல் எதிரொலியாக தமிழகம், ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொன்னை ஆறு, பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும்.

எனவே, பொன்னை ஆறு, பாலாறு கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா்கள் பொதுமக்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, ஆறுகளில் குளிக்கவோ வேடிக்கை பாா்க்கவோ அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ராணிப்பேட்டை  சாா்- ஆட்சியா்  க.இளம்பகவத்  தலைமையில் வட்டாட்சியா்  பாக்கியநாதன்  மற்றும் அலுவலா்கள் ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT