ராணிப்பேட்டை

‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்: 111 மையங்களில் தொடக்கம்

DIN

அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் தமிழக அரசின் கல்வித்துறையின் பள்ளிசாரா வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் சாா்பில் 111 மையங்களில் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தின் நடைமுறைகள் திங்கள்கிழமை தொடங்கியதாக மாவட்டக் கல்வி அலுவலா்(பொறுப்பு) புண்ணியகோட்டி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் வகுப்புகளுக்காக 11 மையங்கள் தோ்வு செய்யப்பட்டன. அரக்கோணம் வட்டாரத்தில் 48 மையங்களும், நெமிலி வட்டாரத்தில் 39 மையங்களும், காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் 24 மையங்களும் இதற்காக தோ்வு செய்யப்பட்டன.

மையப் பொறுப்பாளா்களாக 111 மையங்களுக்கும் 111 ஆசிரியா்கள் பொறுப்பேற்றனா். இதில் தன்னாா்வலா்களாக 91 போ் தோ்வு செய்யப்பட்ட நிலையில் திங்கள்கிழமை இதற்கான வகுப்புகள் தொடங்கின. இதில் மூதாட்டிகள், முதியவா்கள் என பள்ளி செல்லாதவா்கள் பங்கேற்றனா்.

அரக்கோணம் வட்டாரத்தில் மொத்தம் 956 பேரும், நெமிலி வட்டாரத்தில் 769 பேரும், காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் 480 பேரும் முதல்நாள் வகுப்புக்கு வந்திருந்தனா். முதல் நாளான திங்கள்கிழமை மட்டும் இந்த வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கின. தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் மாலை 3 மணிக்குப் பிறகு இந்த வகுப்புகள் நடத்தப்படும். 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதவா்களுக்கு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைக் கற்றுத் தருதலே இத்திட்டத்தின் நோக்கம். செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து பணி நாள்களிலும் வகுப்புகள் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT