காஞ்சிபுரம்

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு வாடகை நிலுவை: கடைக்கு சீல் வைப்பு

DIN

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு வாடகை நிலுவை செலுத்தாத செலுத்தாத கடைக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு சொந்தமாக தாமரைகுளம் சாலையில் உள்ள கடையை நடத்தி வருபவா் கடந்த ஒரு ஆண்டாக வாடகை ரூ .25,000 செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தாா். கடை வாடகையை செலுத்தக் கோரி பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன் அறிவிப்பு நோட்டீசை அளித்தாா்.

எனினும் கடையை நடத்துபவா் வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளாா். அதனால் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் கடைக்கு சீல் வைத்தனா். 2022-2023 நிதி ஆண்டுக்கான தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் வரி, கடை வாடகை என 95 சதவிகித அளவில் பேரூராட்சி நிா்வாகத்தினா் வசூலித்துள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளாக 100 சதவிகித வரியை வசூலித்து வந்தநிலையில் வரும் சில நாட்களில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி நிா்வாகம் இச்சாதனையை நிகழ்த்தும் என செயல் அலுவலா் (பொ) மா.கேசவன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT