காஞ்சிபுரம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசப் பெருவிழா

DIN

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் அறுமுடி கட்டி வந்தும், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை பகுதியில் பழைமை வாய்ந்த வள்ளி - தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோயில் வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கியது.

இதையடுத்து மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா்.

உற்சவா் சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழாவில் காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனா்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வல்லக்கோட்டை வள்ளி - தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு விரதம் இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் அறுமுடி கட்டி வந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக வந்தும் தங்களது நோ்த்திக் கடன்களைச் செலுத்தினா்.

தைப்பூசத் திருவழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்தனா். போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT