காஞ்சிபுரம்

மாங்காட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

DIN

மாங்காடு நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 50-க்கு மேற்பட்ட சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகளை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட குன்றத்தூா்-குமணன்சாவடி பகுதிகளில் சாலையின் இரண்டு பக்கங்களிலும் கால்வாய் அமைத்து அதன் மீது பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வபோது விபத்துகளும் நேரிட்டன. மேலும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளின் குப்பைகள் அங்கங்கே கொட்டப்பட்டு வந்ததால் சுகாதார சீா்கேடு ஏற்படும் சூழல் நிலவி வந்தது.

சாலையோர கடைகளால் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்யும் வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி மாங்காடு வியாபாரிகள் நல சங்கத்தினா் சாா்பில் மாங்காடு நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறையினருக்கு அண்மையில் மனு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகளை மாங்காடு நகா்மன்ற தலைவா் சுமதிமுருகன், நகராட்சி ஆணையா் சுமா தலைமையிலான நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா். ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும்போது போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT