காஞ்சிபுரம்

வீரப்பராஜம்பேட்டை வேதநாதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மராஜம்பேட்டை அருகே வீரப்பராஜம்பேட்டையில் உள்ள வேதநாயகி அம்பிகை சமேத வேதநாத ஈஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருமணத் தடைகளை நீக்கும் மிகப்பழைமையான இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த ஜன. 30 -ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின. மறுநாள் சோமகும்ப பூஜையும், 3 -ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

புதன்கிழமை யாகசாலையிலிருந்து கே.குருமூா்த்தி சிவாச்சாரியாா் தலைமையில் புனித நீா்க் குடங்கள் அனைத்து கோபுரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

ஆலயத்தில் உள்ள கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேசுவரருக்கு மாலையில் திருக்கல்யாண வைபவமும், இரவில் புஷ்பத்தேரில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் கும்பாபிஷேக திருப்பணிக் குழுவினரும், வீரப்பராஜம்பேட்டை கிராம மக்களும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT