காஞ்சிபுரம்

ஒரத்தூா், செரப்பணஞ்சேரி ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

DIN

ஒரத்தூா், செரப்பணஞ்சேரி ஊராட்சிகளில் ரூ.72 லட்சத்தில் சிமெண்ட் சாலை, குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரத்தூா் ஊராட்சியில் ஆதிதிராவிடா் நலப் பணிகள் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.22 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ரூ.8 லட்சத்தில் ஒத்தவாடை தெருவில் சிமெண்ட் சாலை, ரூ.22 லட்சத்தில் மேட்டுக் காலனி மயானத்துக்கு சுற்றுச்சுவா் மற்றும் சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஒரத்தூா் ஊராட்சித் தலைவா் வள்ளி சுந்தா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் ரா.மணிகண்டன் முன்னிலை வகித்தாா். இதில், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் பங்கேற்று வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

இதேபோல், செரப்பணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட ஆரம்பாக்கம் ஸ்ரீலஷ்மி நகா் பகுதியில் ரூ.20 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் அவா் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் செரப்பணஞ்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவா் பாா்த்தசாரதி, ஒப்பந்ததாரா்கள் சேகா், விவேகானந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT