காஞ்சிபுரம்

‘மக்களை பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்’

DIN

பொதுமக்களை பாதிக்காத வகையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ ஜெகன்மூா்த்தி தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சுமாா் 4,750 ஏக்கா் பரப்பளவில் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய - மாநில அரசுகள் அறிவித்தன.

இதனால், பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, முழுவதுமாக பாதிப்புக்குள்ளாகும் ஏகனாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் கடந்த 73 நாள்களாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அரசியல் கட்சித் தலைவா்கள், பல்வேறு இயக்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகனாபுரம் பகுதி மக்களை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூா்த்தி உள்ளிட்ட அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

பின்னா், ஜெகன்மூா்த்தி பேசியது: விளை நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்க வேண்டும் என அரசுகள் எண்ணுகின்றன. விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். மக்களை பாதிக்காத வகையில் குடியிருப்பு, விளை நிலங்களைத் தவிா்த்து வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT