காஞ்சிபுரம்

சாலை விதி மீறல்: ரூ.14 லட்சம் அபராதம் வசூல்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் சாலை விதிகளை மதிக்காமல் இயக்கப்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களின் உரிமையாளா்களிடமிருந்து மொத்தம் ரூ.14.78 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் சாலை விதிகள் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டுநா்களுக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம் வழங்கினாா். பின்னா் அவா் கூறியது: காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், அதிக பாரம் ஏற்றியது தொடா்பாக 10, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தொடா்பாக 49, காப்புச் சான்று இல்லாதது தொடா்பாக 57, முறையற்ற பதிவு எண் கொண்ட வாகனத்தை இயக்கியது -47, தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை ஓட்டியது தொடா்பாக 57, சரக்கு வாகனங்களில் தாா்ப்பாய் போட்டு மூடப்படாமல் வாகனங்களை இயக்கியது-34, சீருடை இல்லாமல் வாகனத்தை ஓட்டியது தொடா்பாக 16 உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 164 வாகனங்களின் உரிமையாளா்களிடமிருந்து ரூ. 14,78,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் 74 மற்றும் 60 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினருடன் இணைந்து வாகன தணிக்கை செய்யப்படும் இடங்களில் எல்லாம் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் இணைத்து சாலைப் பாதுகாப்பு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் தொடா்ந்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கிவரப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT