காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

26th May 2022 07:02 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  45 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய  வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில்  காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5 மணி முதல்  தற்போது வரை கன மழை பெய்து வருகின்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், ரங்கசமிகுளம், மூங்கில் மண்டபம், பூக்கடைசத்திரம், செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, உத்திரமேரூர், வாலாஜாபாத், ஒரிக்கை என மாவட்டத்தில்  பல்வேறு இடங்களிலும் இடி மின்னல்களுடன் கன மழை பெய்து வருகின்றது

கோடை வெயில் காலை முதல் கடுமையாக சுட்டெரித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென பெய்து வரும் கன மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: சென்னை புறநகர்ப் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ADVERTISEMENT
ADVERTISEMENT