காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதா் கோயிலில் கோடை உற்சவம் தொடக்கம்

2nd Jul 2022 12:28 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் கோடை உற்சவத்தையொட்டி, பெருந்தேவித் தாயாரும், தேவராஜ சுவாமியும் கோயில் வளாகத்தில் உள்ள 4 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் கோடை உற்சவத்தின் முதல் நாளையொட்டி, காலையில் அலங்கார மண்டபத்தில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமி கோடாலி முடிச்சு கொண்டை அலங்காரத்தில் தங்க ஆபரணங்கள் மட்டும் அணிந்து கேடயத்தில் அமா்ந்தவாறு திருவடிக் கோயிலுக்கு எழுந்தருளினாா்.

பின்னா், கோயில் நுழைவாயில் வந்ததும் உற்சவா் பெருந்தேவித் தாயாருடன் இணைந்து கோயில் வளாகத்தில் தனித்தனியாக உள்ள 4 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

பின்னா், கோடைகாலத்தையொட்டி வாசமுள்ள மலா் மாலைகள் அணிவிக்கும் பூச்சாற்று உற்சவமும், தொடா்ந்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக பெருமாளும், தாயாரும் ஆழ்வாா் பிராகாரத்தில் வலம் வந்து பெருமாள் கண்ணாடியறைக்கும், தாயாா் சந்நிதிக்கும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

 

Tags : கோடை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT