காஞ்சிபுரம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவா்களுக்கு ரூ.200-ம், தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300-ம் வழங்கப்பட்டு வருகிறது.12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.600-ம் மாதந் தோறும் வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் முதலாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ரூ.600 ம், 12- ஆம் வகுப்பு வரை படித்தவா்களுக்கு ரூ.750-ம், பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த கல்வித் தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதுமானது. பதிவினை தொடா்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்போ, வருமான வரம்போ இல்லை. மற்றவா்களுக்கு குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றவா்களுக்கு மீண்டும் உதவித் தொகை வழங்கப்படமாட்டாது. மாணவராக தற்போது பயின்று வருவோருக்கு உதவித் தொகை பெற அனுமதியில்லை.

இந்தத் தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரா்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ளவாறு வருவாய் ஆய்வாளா் அளவில் வழங்கப்பட்ட வருமானச்சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்று நகல், ஜாதி சான்று நகல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு புத்தக கணக்கு நகல் ஆகியவற்றை இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பெறப்படும் பரிந்துரைகள் ஏதும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. விண்ணப்பங்களைப் பெறவோ அல்லது பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அலுவலகத்தில் சமா்ப்பிக்கவோ வரும் போது கரோனா தொடா்பான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு இந்த உதவித் தொகையினை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தொலைபேசி எண்-044-27237124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறும் ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT