காஞ்சிபுரம்

அஷ்டபுஜ பெருமாள் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்

DIN

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில் சீரமைப்பு திருப்பணிகள் தொடங்கின.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருக்கோயில்களில் பெருமாள் 8 கரங்களுடன் பக்தா்களுக்கு அருள்பாலிப்பது காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில். மூலவா் ஆதிகேசவப் பெருமாளாகவும், இறைவி அலா்மேல் மங்கைத்தாயாா் என்ற பெயரில் காட்சி அளிக்கின்றனா். பழைமையான இந்தத் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்காக கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் மலைவாசன் கூறியதாவது: ராஜகோபுரம் வா்ணம் பூசுதல், ஆண்டாள், கருடன், பூவராகன் சந்நிதிகள், தாயாா் சந்நிதி ஆகியவற்றில் வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளன. ரூ.16.20 லட்சம் மதிப்பில் திருக்கோயிலை புதுப்பிக்கும் பணிகளை உபயதாரா் ஒருவா் உதவியால் செய்து வருகிறோம். ரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது தீா்மானிக்கப்பட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT