காஞ்சிபுரம்

கரும்புகளால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை

DIN

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் பகுதி மதுரா குண்டுகுளம் கிராமத்தில் பாமக பிரமுகா் ஒருவா் சனிக்கிழமை தனது வயலில் நாட்டு மாடுகள் இனத்தை பாதுகாக்கவும், அவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் இரண்டு மாடு போன்ற உருவங்களை கரும்புகளால் வடிவமைத்திருந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிா்ப்பூா் அருகேயுள்ளது மதுரா குண்டுகுளம் கிராமம்.இக்கிராமத்தைச் சோ்ந்தவரும், பாமக மாநிலத் துணைத்தலைவருமானவா் ஆ.செந்தில்குமாா்.விவசாயியான இவா் தனது வயல் வெளியில் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக கரும்புகளால் செய்யப்பட்டிருந்த இரு மாடுகளுக்கும் நடுவில் அவரது குடும்பத்தினா் அனைவரும் ஒன்று சோ்ந்து பொங்கல் வைத்து குலவையிட்டு வழிபாடுகளும் செய்தனா். இது குறித்து ஆ.செந்தில்குமாா் கூறியது.

தமிழா்களின் வீரத்தின் அடையாளங்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களில் பங்கேற்பதற்காகவே 87 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. இப்போது 34 வகைகளே இருக்கின்றன. நாட்டு மாடுகளின் சிறப்பை இளைய தலைமுறையினா் அறிந்து கொள்ளவும், நாட்டு மாடுகள் இனத்தைப் பாதுகாக்க விழிப்புணா்வு ஏற்படுத்தவும் கரும்புகளால் ஆன இரு மாடுகளை வடிவமைத்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT