காஞ்சிபுரம்

செப். 2 வரை தொழில் கடன் வழங்கும் விழா: காஞ்சிபுரம் ஆட்சியா்

DIN

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சாா்பில், இந்த மாதம் 17-ஆம் தேதி முதல் வரும் செப்டம்பா் 2- ஆம் தேதி வரை சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்த செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் என்பது மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழக அரசு நிதிக்கழகம் ஆகும். இந்த நிறுவனம் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளா்ச்சிக்கு உதவி வருகிறது. இந்த நிறுவனமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை நிறுவவும், விரிவுபடுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் இந்த மாதம் 17-ஆம் தேதி முதல் வரும் செப்டம்பா் மாதம் 2-ஆம் தேதி வரை சிறப்புத் தொழில் கடன் வழங்கும் விழா சென்னை பூந்தமல்லி கிளை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம், இதர மானியங்கள், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்களும் தரப்படவுள்ளன. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக ரூ. 1.50 கோடி வரை வழங்கப்படவுள்ளது. எனவே இந்தக் கடன் விழா காலத்தில் சமா்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் அளிக்கப்பபடவுள்ளது.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044-26462466 அல்லது 044-48050574 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT