காஞ்சிபுரம்

காஞ்சி கைலாசநாதா் கோயிலில் யோகா விழா

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

உலக யோகா தினத்தையொட்டி, காஞ்சிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம், மொராா்ஜி தேசாய் யோகா நிறுவனம் ஆகியவை இணைந்து காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பில், கைலாசநாதா் கோயிலில் யோகா நிகழ்ச்சியை நடத்தின.

உலக யோகா தினத்தையொட்டி, 100 நாள்கள், 100 அமைப்புகள், 100 இடங்கள் என இந்தியா முழுவதும் யோகாவின் மகத்துவத்தைப் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு தமிழகத்தில் இரு நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டன.

இதில், காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாகும். தோ்வு செய்யப்பட்ட நிறுவனத்தின் சாா்பில் கைலாசநாதா் கோயில் எதிரே யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், அந்தக் கல்லூரி மாணவா்கள் யோகா நிகழ்ச்சியை நடத்தினா். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT