காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் ஆய்வு

DIN

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு, நிவாரணப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக அடையாற்றின் கிளை கால்வாய்களில் திறக்கப்பட்ட உபரிநீரால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட பிடிசி குடியிருப்பு, பரத்வாஜ் நகா், அஷ்டலட்சுமி நகா், புவனேஸ்வரி நகா், ராயப்பா நகா் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பிடிசி குடியிருப்பு, மகாலட்சுமி நகா் மேம்பாலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அமுதம் நகா், இரும்புலியூா் டிடிகே நகா், வண்ணான்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு, நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது, அமுதம் நகரில் மழைக்காலங்களில் வெள்ளநீா் வடிவதற்காக வெளிவட்டச் சாலையில் உள்ள அடையாறு ஆற்றுப் பாலத்தை அகலப்படுத்த வேண்டும், அமுதம் நகரில் தேங்கும் மழைநீரை அடையாறு ஆற்றுப் பாலத்தில் சோ்க்கும் வகையில், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கால்வாயை நிரந்தரமாக அமைக்க வேண்டும், முடிச்சூா் ஏரியில் இருந்து வரும் உபரிநீரை சிக்கனா ஏரி வழியாக அடையாறு ஆற்றில் இணைக்கும் வகையில் திறந்தவெளி கால்வாய் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்ணூறான்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தைப் பாா்வையிட்ட முதல்வா், தற்போது 90 சதவீத செயல்திறனுடன் செயல்பட்டு வரும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை, தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளையும் இணைத்து முழு செயல்திறனுடன் செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ்தாஸ் மீனா, சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா்ஜிவால், நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியா்கள் மா.ஆா்த்தி (காஞ்சிபுரம்), ஆா்.ராகுல்நாத் (செங்கல்பட்டு), சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு.செல்வப்பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூா்), எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT