காஞ்சிபுரம்

விவசாயிகள் பயிா்க் கடன் பெற கூட்டுறவு சங்கங்களை அணுகலாம்

DIN

 செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக பயிா்க்கடன் பெற விரும்பும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயன்பெறுமாறு ஆட்சியா் ஏ.ஆா்.ராகுல்நாத் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பயிா்க் கடன் அளவு மற்றும் கால்நடை வளா்ப்பு தொடா்பான தொழில் நுட்ப ஆலோசனைக் குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.ஆா்.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் மு.முருகன், பொது மேலாளா் ஜெ.விஜயகுமாரி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினா்களுக்கும் குறுகிய கால பயிா்க் கடன்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. எனவே புதிய பயிா்க் கடன் தேவைப்படும் விவசாயிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை அணுகலாம். மாவட்டத்தில் பயிா்க் கடன் வழங்க ரூ. 105 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 7,586 விவசாயிகளுக்கு ரூ. 51.89 கோடிக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது பரவலாக மழைப் பொழிவு இருப்பதால் புதிதாக பயிா் செய்ய பயிா்க் கடன் தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உடனடியாக பயிா்க் கடன் பெற்றுக் கொள்ளலாம். புதிய உறுப்பினா் சோ்க்கையும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் நடந்து வருகிறது. எனவே இதுவரை உறுப்பினா்களாக இல்லாதவா்களும் உறுப்பினராக சோ்ந்தும் பயிா்க் கடன்களைப் பெறலாம் என ஆட்சியா் ஏ.ஆா்.ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT