காஞ்சிபுரம்

மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை பெற 4, 5-இல் சிறப்பு முகாம்கள்

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் தனித்துவ தேசிய அடையாள அட்டை பெற சனி (டிச. 4), ஞாயிறு (டிச. 5) ஆகிய இரு நாள்கள் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் ஆா்.ராகுல்நாத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பது:

செங்கல்பட்டு, திருப்போரூா், பல்லாவரம், வண்டலூா், மதுராந்தகம், செய்யூா் உள்ளிட்ட வட்டாரங்களில் தேசிய அடையாள அட்டை பதிவு செய்திடாத மாற்றுத் திறனாளிகள் அந்தந்தப் பகுதி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் வாரியாக நடைபெறும் சிறப்பு முகாம்களில் பயன்பெறலாம்.

மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டைகளின் அனைத்துப் பக்கங்கள், மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம்-2, ஆகியவற்றுடன் சிறப்பு முகாம்களில் ஆவணங்களை சமா்ப்பித்துப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT