காஞ்சிபுரம்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: இழப்பீடு வழங்காமல் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

DIN

சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இழப்பீடு வழங்காமல் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததைத் தொடா்ந்து, வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையில் இருந்து ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கும் பணி கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறை அப்பகுதியில் உள்ள சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவு இடத்தை தோ்வு செய்துள்ளது. பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் உரிமையாளா்களுக்கு இது குறித்து முறையான நோட்டீஸ் வழங்காமலும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமலும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில், ஸ்ரீபெரும்புதூா் பகுதி முதல் செட்டிப்பேடு பகுதி வரை சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் கடந்த புதன்கிழமை செட்டிப்பேடு பகுதியில் தொடங்கினா். அதன் தொடா்ச்சியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக வியாழக்கிழமை தண்டலம் பகுதியில் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. எனவே இழப்பீடு வழங்காமல் வீடுகளை இடிக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை (நில எடுப்பு) அதிகாரிகள் இது குறித்து விரைவில் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதாகவும், இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், இழப்பீடு வழங்காமல் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT