காஞ்சிபுரம்

உத்தரமேரூரில் ஏலச்சீட்டு மோசடி: காவல்நிலையம் முற்றுகை

DIN

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி உத்தரமேரூர் காவல்நிலையத்தை 100க்கும் மேற்பட்டடோர் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பாவோடும் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(39). கார் டிரைவராகவும் இருந்து வந்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக உத்தரமேரூர் பகுதியில் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான ஏலச் சீட்டுகளை நடத்தி வந்தார். இவர் திடீரென தலைமறைவானது தொடர்பாக அவரிடம் பணம் செலுத்தி ஏமாந்த பாதிக்கப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டோர் உத்தரமேரூரைச் சேர்ந்த கே.கண்ணன் என்பவர் தலைமையில்  தலைமறைவான பாக்கியராஜ் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் உத்தரமேரூர் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். இது குறித்து கே.கண்ணன் கூறுகையில் எனக்கு மட்டும் ரூ.4.11லட்சம் தரவேண்டும். தொடர்ந்து பணம் தராமல் இருந்து வந்ததார். பின்னர் வீடு, நிலம் ஆகியனவற்றை விற்று தருவதாக கூறி வந்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக  காஞ்சிபுரம் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் புகார் செய்துள்ளோம். உத்தரமேரூர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம் பாக்கியராஜ் மொத்தம் ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளார். 

அவரைக் கைது செய்து பணத்தை திரும்பப் பெற்றுத்தருமாறும் அவர் தெரிவித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் காவல் நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT