காஞ்சிபுரம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் மற்றும் ஆலந்தூா் என 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 6,21,525 ஆண் வாக்காளா்கள், 6,50,973 பெண் வாக்காளா்கள் உள்ளனா். திருநங்கைகள் 207 போ் உள்பட மொத்தம் 12,72,705 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்கத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சேமித்து வைக்கும் இயந்திரங்கள் ஆகியன காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் உள்ளன. 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ள இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களும் உடன் இருந்தனா்.

பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பிறகு மீண்டும் வருவாய்த் துறையினரால் வாக்குப் பதிவு இயந்திரங்களும், அதை வைத்திருக்கும் இடமும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலா் மா.நாராயணன் மற்றும் தோ்தல் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT