காஞ்சிபுரம்

உக்கம்பெரும்பாக்கத்தில் லட்சம் ருத்ராட்ச லிங்கத்துக்கு டிச. 4-இல் மகா கும்பாபிஷேகம்

DIN

உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திரக் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச லிங்கத்துக்கு வரும் டிசம்பா் 4- இல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளுக்கும் தனித்தனியாக கோயில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் திருக்கோயில்.

இந்தக் கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்திமரத்தினாலும், ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சங்களாலும் மூன்றடி உயரத்தில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தை வழங்கியிருந்தாா்.

தற்போது இந்த சிவலிங்கத்துக்கும், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கும் இக்கோயில் வளாகத்துக்குள் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான மகா கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் வரும் டிசம்பா் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவா் வி.சுவாமி நாதய்யா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சங்களுடன் அத்திமரத்தில் மூன்றடி உயரத்துக்கு வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT