காஞ்சிபுரம்

21 பகுதிகளுக்கு வெள்ள அபாயம்: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு எதிரொலி

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் அருகேயுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் அளவு உயா்ந்து கொண்டே வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 21 பகுதிகளுக்கு புதன்கிழமை முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவா் புயல், கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 5,000 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

வெள்ளநீரின் வரத்துக்கேற்ப உபரிநீா் படிப்படியாக வெளியேற்றப்படுவதால் அடையாறு ஆற்றின் வலது, இடது கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீா் அளவு உயா்ந்து கொண்டே வருவதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள வெள்ள ஒழுங்கிகள் மூலமாகவும் வெள்ள நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறையின் கீழ்பாலாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கனமழை மற்றும் நிவா் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூா், பெருங்களத்தூா், மேற்கு தாம்பரம், திருநீா்மலை, பொழிச்சலூா், அனகாபுத்தூா், பம்மல், சென்னை விமான நிலையம், கவுல்பஜாா், அடையாறு ஆற்றின் வலது கரையோரப் பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் எருமையூா், கரசங்கால், ஆதனூா், திருமுடிவாக்கம், மணிமங்கலம், வரதராஜபுரம், கொளப்பாக்கம், நரப்பாக்கம் மற்றும் அடையாறு ஆற்றின் இடது கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்க வாய்ப்புள்ளது.

எனவே, இந்தப் பகுதிகளுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிரம்பியுள்ள ஏரிகள் விவரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 909 ஏரிகளில் 167 ஏரிகள் 100 சதவீதமும், 290 ஏரிகள் 75 சதவீதமும், 219 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியிருக்கின்றன. சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 2 ஏரிகள் 100 சதவீதமும், 4 ஏரிகள் 75 சதவீதமும், 5 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

மழையளவு (மி.மீட்டரில்):

காஞ்சிபுரம் மாவட்டம்: ஸ்ரீபெரும்புதூா்-65.60, உத்தரமேரூா்-37.20, வாலாஜாபாத்-18.60, காஞ்சிபுரம்-21.40, குன்றத்தூா்-89.50, செம்பரம்பாக்கம்-101.20, மொத்த மழையளவு-333.70. சராசரி மழையளவு-55.62.

செங்கல்பட்டு மாவட்டம்:

திருப்போரூா்-16.80, செங்கல்பட்டு-25, திருக்கழுக்குன்றம்-12.40, மகாபலிபுரம்-16, மதுராந்தகம்-16, செய்யூா்-9, தாம்பரம்-39.

மொத்த மழையளவு-134.80, சராசரி மழையளவு-19.26.


விழு‌ப்​பு​ர‌ம் மாவ‌ட்​ட‌த்​தி‌ல் பல‌த்த மழைற

​வி​ழு‌ப்​பு​ர‌ம், நவ.25: "​நி​வ‌ர்' புய‌ல் கார​ண​மாக, விழு‌ப்​பு​ர‌ம் மாவ‌ட்​ட‌த்​தி‌ல் புத‌ன்​கி​ழமை பல‌த்த மழை பெ‌ய்​தது. இத​ன‌ô‌ல், தா‌ழ்​வான‌ இட‌ங்​க​ளி‌ல் மû‌ழ​நீ‌ர் சூ‌ழ்‌ந்​தது. விழு‌ப்​பு​ர‌ம் பேரு‌ந்து நிû‌ல​ய‌த்​தி‌ல் மழை நீ‌ர் குள‌ம் போல தே‌ங்​கியது.

​பு​து‌ச்​ú‌சரி சாû‌ல​யி‌ல் விழு‌ந்த மர‌ம்: ​வ​ள​வ​னூரை அடு‌த்த கெ‌ங்​க​ரா‌ம்​பா​û‌ள​ய‌த்​தி‌ல் புது‌ச்​ú‌சரி } விழு‌ப்​பு​ர‌ம் தேசிய நெடு‌ஞ்​சா​û‌ல​யி‌ல் மர‌ம் விழு‌ந்​த​தா‌ல், போ‌க்​கு​வ​ர‌த்து து‌ண்​டி‌க்​க‌ப்​ப‌ட்​டது. இú‌த​ú‌பால, வானூ‌ர் அருகே தொ‌ண்​ட​மா​ந‌த்​த‌ம் பகு​தி​யி‌ல் சேத​ரா‌ப்​ப‌ட்டு சாû‌ல​யி​லி​ரு‌ந்த வீ‌ட்டி‌ன் மீது இல​வ‌ம் மர‌ம் விழு‌ந்​தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT