காஞ்சிபுரம்

செங்கல்பட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி போராட்டம்

DIN

செங்கல்பட்டு நகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட மகளிர் 70 பேரை மீண்டும் பணியமர்த்த கோரி கொட்டும் மழையில் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு நகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 70 பெண் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரியும் உள்ளாட்சி சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் குடையுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .  

கரோனா தொற்று காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டிருந்த 70 பெண் ஊழியர்களை செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் தீபாவளி அன்று திடீர் பணி நீக்கம் செய்தது.

எந்தவித காரணமுமின்றி பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்கள் நகராட்சி நிர்வாகத்திடம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து போய் கேட்டதற்கு நிர்வாகம் சரிவர பதில் அளிக்காமல் நிராகரித்துவிட்டது.

இதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த கூறி சிஐடியு உள்ளாட்சி சங்கம் ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் சிறப்பு தலைவர் எம் .ரவி சிஐடியு மாவட்ட செயலாளர் இ.சங்கர்,மாவட்ட குழு கே.வேலன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் மாவட்ட செயலாளர் வி. அரிகிருஷ்ணன், செங்கல்பட்டு ஆட்டோ சங்க சிறப்பு தலைவர் என்.அன்பு, முறைசாரா சங்கத்தின் செங்கல்பட்டு பகுதி செயலாளர் என். அருணாச்சலம், சிறுபான்மை நலக்குழு செங்கல்பட்டு தாமஸ் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாவட்ட குழு மு.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கொட்டும் மழையில் குடையுடன் கண்டன உரையாற்றி கோஷமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT